lankasudar
சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018-ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், விஜே சித்ரா, சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தொடரின் கதை கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதால் கிராமங்களிலும்,

நகரங்களிலும் இத்தொடருக்கு பார்வையாளர்கள் அதிகம். அதேபோல் இத்தொடரில் நடிக்கும் கதிர் – முல்லை, தனம் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.

இத்தொடரில் இரண்டாவது மருமகளான மீனா கதாபாத்திரத்துக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடைபெற்றுள்ளது.

வரும் திங்கள் நவம்பர் 23-ம் தேதி மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை பெயர் சூட்டும் விழா ஒளிபரப்பாக இருப்பதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பார்வையாளர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே மீனா கேரக்டரின் வளைகாப்பு நிகழ்ச்சியை 3 மணி நேரம் சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பியது விஜய் டிவி. அதில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும் மூத்த மருமகள் தனத்துக்கு குழந்தையில்லை என்ற நெகட்டிவ்வான விஷயங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த முறை பெயர் சூட்டும் விழா முழுவதும் பாசிட்டிவ்வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு புதிதாக வந்திருக்கும் குட்டி பாப்பாவுக்கு குடும்பத்தினர் என்ன பெயர் சூட்டப் போகிறார்கள் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்தது எப்படி? – சிகிச்சையளித்த மருத்துவமனை வழங்கியுள்ள விளக்கம் இதோ!

editors

இந்த நடிகரா இப்படி ?? அவர் ஒரு மாதிரி! பழைய கணவனின் புதுக்காதலி வீட்டுக்கு மனைவி எழுதிய அந்தரங்க கடிதம் !!

editor

நடிகர் விக்ராந்தின் மனைவி இந்த சீரியல் நடிகையா?

editors