lankasudar
ஜோதிடம்

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 21.11.2020.

மேஷம்: அசுவினி: பிறருக்கு உதவி செய்வதால் பாராட்டப்படுவீர்கள். வருமானம் கூடும்.
பரணி: பணியிடத்தில் முக்கியப் பொருட்களை கவனமாக கையாள்வது நல்லது.
கார்த்திகை 1: உடல்நலம் சார்ந்த சிறு பிரச்னைகள் ஏற்பட்டு பின் சரியாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாழ்க்கைத் துணை மூலம் நன்மை ஒன்று நிகழக்கூடும்.
ரோகிணி: வெளியூரிலிருந்து மனம் இனிக்கும் படியான செய்திகள் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1,2: நேற்றைய கவலைகள் முழுக்கத் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: முன்பு இருந்த சிரமங்கள் தீரும். நண்பர்கள் உயர்வடைவர்.
திருவாதிரை: வீண் பழிகள் வரக்கூடிய செயல்களில் இறங்க வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: பெண்கள் தேவையற்ற சச்சரவுகளில் மூக்கை நுழைக்காதீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: பொது விஷயங்களை முன்னின்று பொறுப்புடன் நடத்துவீர்கள்.
பூசம்: தாயாருக்கு உடல் உஷ்ணத்தால் சில சிரமங்கள் ஏற்படக் கூடும்.
ஆயில்யம்: கணவரின் வாகனம் செலவு வைக்கும். நேர்மை நிம்மதி தரும்.

சிம்மம்: மகம்: சேமிப்பு உயரும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப நிம்மதி மீளும்.
பூரம்: திடீர் லாபம் வரும். சமீபத்திய கவலைகள் ஒரு வழியாக நீங்கும்.
உத்திரம் 1: வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த்து நிம்மதி பெறுவீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: நண்பருக்கு உதவப்போய்ச் சங்கடத்தில் மாட்ட வேண்டாம்.
அஸ்தம்: சக பணியாளர்களின் உதவியால் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.
சித்திரை 1,2: நல்லவர்களின் உபதேசத்தைப் புறக்கணிக்காமல் ஏற்பீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: உங்கள் பேச்சுவார்த்தையில் அனுபவ அறிவு வெளிப்படும்.
சுவாதி: குடும்ப மகிழ்ச்சி கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி வரும்
விசாகம் 1,2,3: பணியாளர்களுக்கு அதிருப்திகள் ஏற்பட்டுச் சரியாகும்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்களுக்கு கலைத்துறையில் ஆர்வமும், ஈடுபடும் அதிகரிக்கும்.
அனுஷம்: பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம்.
கேட்டை: முன்பைவிட வருமானம் உயரும். இளமையாக உணர்வீர்கள்.

தனுசு: மூலம்: புதிய துறையில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் பயிற்சி பெறுவீர்கள்.
பூராடம்: பொதுப் பணத்தைக் கையாளும்போது நேர்மையாக இருங்கள்.
உத்திராடம் 1: எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள் தாமதமாக வரும்

மகரம்: உத்திராடம் 2,3,4: புகுந்த வீட்டினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
திருவோணம்: பண நெருக்கடி காரணமாக சிறு கலக்கம் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் 1,2: வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதால் மகிழ்ச்சி ஏற்படும்.
சதயம்: பணி நிமித்தமாக செய்ய வேண்டிய பயணங்கள் தள்ளிப்போகும்.
பூரட்டாதி 1,2,3: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மீனம்: பூரட்டாதி 4: வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பணியில் ஆர்வம் கூடும்.
உத்திரட்டாதி: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்பு கூடும்.
ரேவதி: மகிழ்ச்சியும், சங்கடமும் தரும் கலப்பு பலன்களாகவே இருக்கும்.

Related posts

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 28.09.2020

editors

இன்றைய நாளுக்கான ராசி பலன் 2020.05.07 – உங்களுக்கு எப்படி?

editor

விடிந்திருக்கும் இப்புதிய நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசி பலன் – 2020.04.30

editor