lankasudar
உலகம்

வெடித்து சிதறிய சமையல் எரிவாயு டாங்கர் லொறி – 14 பேர் கருகி உயிரிழப்பு!

மெக்சிகோவில் சமையல் எரிவாயு டாங்கர் லொறி ஒன்று வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இவ்விபத்தில் சாரதி உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ மேற்கு – நயாரித் மாகாணத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் திரவமாக்கப்பட்ட சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு டாங்கர் லொறி ஒன்று சென்றுள்ளது.

அதி வேகத்தால் இந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதி விட்டு வீதியில் கவிழ்ந்தது.

இதனால் டாங்கரில் இருந்த திரவ வாயு வீதியில் கொட்டி ஆறாக ஓடியது.

அதன் பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் டாங்கர் லொறி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இவ்விபத்தில் ஏராளமான வாகனங்கள் சிக்கி தீக்கிரையாகின.

அத்தோடு, மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

Related posts

ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சி அமைப்பின் தலைவரையும் சீண்டியது கொரோனா

editors

பிரித்தானியாவில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு.

editors

வாய் பேச முடியாத காது கேளாத என் மகளின் நிர்வாண போட்டோ வந்தது..! அவள் கதறியது போனில் கேட்டது..!

editor