lankasudar
உலகம்

பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதி!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றதுடன் தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகிறார்.

இந்நிலையில் 44வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது தலைமையின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக பைடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் , அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஒபாமா, பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது. அவர் தனது அமைச்சரவையில் எனக்கு ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன் என கூறியுள்ளார்.

அத்துடன் ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து விட்டால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்து உள்ளார்.

எனினும் , பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதியுடன் கூறியுள்ளார்.

மேலும் வெள்ளை மாளிகை பணியாளராக உடனடியாக செயல்பட நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

Related posts

பிரான்ஸில் தமிழ் மக்களின் சில செயற்பாடுகள் – மீண்டும் கொரோனாவின் கோரத் தாண்டவம்!

editors

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா இல்லையாம் – எந்த நாடு தெரியுமா?

editors

அடுத்த ஆபத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்- உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

editors