lankasudar
சினிமா

மாஸ்டர் படக்குழுவினரின் திடீர் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் திடீர் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள்.

மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் சிலர் யூடியூபில் மட்டுமின்றி,

திரையரங்கிலும் ’மாஸ்டர்’ டீசரை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை தற்போது படக்குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

நாளை மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரை அரங்கிலும் ’மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related posts

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

editors

பிரபல இளம் இசையமைப்பாளர் 35 வயதில் மரணம்.

editors

ஜோதிகாவிடம் நிருபர்கள் கேட்ட அந்த கேள்வி -ஜோதிகா கொடுத்த சாட்டையடி பதில்.

editors