lankasudar
இலங்கை எம்மவர் நிகழ்வு

அமரர் ரவிராஜின் 14 ஆவது நினைவு தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு!(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 14 ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று காலையில் இடம்பெற்றது.

யாழ். சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமரர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ், அவரது புதல்வி ஆகியோர் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,

தமிழ் தேசிய மக்கள் கட்சியின் பேச்சாளர் க.அருந்தவபாலன்,சட்டத்தரணி மணிவண்ணன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், சாவகச்சேரி பிரதேச நகர சபை உப தவிசாளர் அ.பாலமயூரன், சாவகச்சேரி பிரதேச சபை ணவிசாளர் க.வாமதேவன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா ரவிராஜ் , சாவகச்சேரி டிரிபேர்க் கல்லூரி மற்றும் யாழ். பரியோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

சட்டத்தரணியாக இருந்து பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்தார்.

1987 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்த ரவிராஜ், 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகர சபை முதல்வராகவும் பதவிகள் வகித்தார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி தொகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

2006 நவம்பர் 10 ஆம் திகதி காலை 8:45 அளவில் கொழும்பு நாரஹென்பிட்டிய – மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டின் அருகில் அடையாளந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்.[படங்கள் இணைப்பு]

editors

தற்போது கிடைத்த செய்தி – மேலும் 8பேருக்கு கொரோனா

editors

பொது மக்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!

editors