lankasudar
இலங்கை

மட்டக்களப்பில் பாடசாலையை புனரமைத்து கையளித்த விமானப்படையினர்! (படங்கள் இணைப்பு)

விமானப்படையின் 70 ஆண்டு நிறைவினையிட்டு மட்டக்களப்பு வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை விமானப்படையினர் புரனமைத்து கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (02) பாடசாலை அதிபர் இ .இலங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் நிலந்த பியசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலை கட்டிடத்தினை நாடாவெட்டி திறந்துவைத்து,

பாடசாலை அதிபரிடம் கையளித்ததுடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றினையும் நாட்டித்தார்

2013 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் இப்பாடசாகை;கான கட்டிடம் ஒன்று அமைத்து கொடுத்துள்ளனர் இது பின்னர் பழுதடைந்துள்ளது

இந்த நிலையில் குறித்த பாடசாலைக்கட்டிடங்களை இலங்கை விமானப்படையில் 70 ஆண்டு நிறைவினையிட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக,

பாடசாலையின் அனைத்து கட்டிடங்களையும் புனர்நிர்மாணித்து நிறம்பூசி பாடசாலையைச் சுற்றி சுற்றுவேலி அமைக்கப்பட்டு இன்று சம்பிராயபூர்வமாக கையளித்தனர்.

இதில் கலந்துகொண்ட குரூப் கெப்டன் நிலந்த பியசேன தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தார்.

இதனையடுத்து விமானப்படை அதிகாரிக்கு பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை சேகர முகாமைக் குரு அருட்பணி சாம் சுபேந்திரன் , கிராம சேவை உத்தியோகத்தர் சியாமினி சித்திரவேல் , அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகாசினி கலைநேசன் , மாநகர சபை உறுப்பினர் எஸ் குமார் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் விழா (படங்கள் இணைப்பு)

editors

5 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

editors

அரச ஊழியர்களால் பயன்படுத்தப்படாத காணிகளை வாங்கி இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் ! ஆளுனர்

editors