lankasudar
இலங்கை

கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் இராணுவத்தினரால் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு தண்டுவான் கிராமசேவகர் பிரிவில் 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் இராணுவத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தண்டுவான் 17 ஆவது கஜப படைப்பிரிவின் இராணுவதளபதி லெப்னன் கேணல் டீ.ஸ் குசுன்ஸ்ரீ அவர்களின் ஏற்பாட்டில் படையினர்களால் சேர்க்கப்பட்ட நிதியில் இருந்து தண்டுவான் கிராமம் ,

ஓதியமலை கிராமம், இத்தொடு கிராமம், பழம்பாசி,கரடிப்பிளவு, சம்மளங்குளம், ஆகிய கிராமங்களை சேர்ந்த 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு இராணுவத்தளபதியால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களை இனங்கண்டுகுடும்பநல உத்தியோகத்தர், கிராமசேவைக்கே ஊடாகவும்குடும்பங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு 64 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ம்.ஸ் கருணரட்ண போசாக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் இராணுவ பொறுப்பதிகாரிகள் , குடும்பநல உத்தியோகத்தர், கிராமசேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பொகவந்தலாவையில் தீபற்றி எரிந்த முச்சக்கர வண்டி (படங்கள் இணைப்பு)

editors

கொரோனா – தாவடியை சேர்ந்த குடும்பத்தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம்.

editors

சற்றுமுன் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை.

editors