தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சிலர் நேற்று (01) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இது ஐரோப்பா முழுதும் பரந்து வாழும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ந்த புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது இலங்கை இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தை தமிழ் மக்களின் தாயகமாக நியமிக்க வேண்டும்.இ வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற .மற்றும் புலிகளின் போர்க் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக அமைந்திருந்தது.
மேலும்இ ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் மூலம் தமிழீழத்தைப் பெற வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.