lankasudar
இலங்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிராகரிக்குமாறு அமைச்சர் தினேஸ் குணவர்தன கோரிக்கை !

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை நிராகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாடு ஜெனிவாவில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்த நிலையில் நேற்றைய அமர்வில் கருத்துரைத்த போதே வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை கூறியுள்ளார்.

இதற்கமைய முன்னோடியில்லாத வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பணியாற்றிய ஜனாதிபதி மற்றும் இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் தமது பயங்கரவாதத்தை விரிவுபடுத்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆகிய இரண்டு உலகத் தலைவர்களைக் கொலை செய்த உலகின் ஒரே பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு காணப்படுவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத்தின் முடிவானது, அனைத்து உரிமைகளிலும் மிகவும் மதிக்கத்தக்க உரிமையான, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.

எனினும், இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற தீர்மானத்தைக் கொண்டுவருவதில் இலங்கைக்கு எதிராக மேலாதிக்க சக்திகள் ஒன்றிணைந்ததுடன், தற்போதும் கூட இலங்கையின் தரப்பில் இருக்கும் நட்பு நாடுகளின் ஆதரவால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சபைக்கு முற்றிலுமான அரசியல் நோக்கங்கள் குறித்து மேலும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒவ்வொரு நிகழ்விலும், நடைமுறை முறைகேடுகளையும், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தை எவ்வாறு அமைக்கும் என்பதையும் இலங்கை முன்வைத்தது.

2015ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியேற்ற அரசாங்கம், மனித உரிமைகள் அரங்கில் முன்னோடியில்லாத வகையில், சொந்த நாட்டிற்கு எதிரான தீர்மானமான 30 கீழ் 1 இற்கான இணை அனுசரணையாளர்களாக இணைந்தது.

அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத மற்றும் வழங்க முடியாத பல கடமைகளை நிறைவேற்றியது.

இலங்கை மக்கள் இந்தத் தீர்மானத்தை நிராகரித்தமை காரணமாகவே, 2019 நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கமைய இந்த சபையின் 43வது அமர்வில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக தாம் அறிவித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் தாம் வெளிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கை மேற்கொண்டுள்ள இந்த தன்னார்வக் கடமைகளை இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் செயற்படுத்துவதிலான தற்போதுள்ள வழிமுறைகளின் தொடர்ச்சி

, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விஷேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்,

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல், காணிகளைத் திருப்புவதிலான முன்னேற்றம், வாழ்வாதாரத்தைக் குறைத்தல் மற்றும் அதற்கான புதிய வழிகளை உருவாக்குதல் போன்ற முன்னேற்றங்கள் குறித்த தமது கருத்துக்களுக்கான விரிவான புதுப்பிப்புக்களை கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் நிலையிலும் இலங்கை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.


அத்துடன் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சுதந்திரமான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடாத்தி, ஆசியாவின் மிகப் பழமையான நாடாளுமன்ற ஜனநாயக நாடான இலங்கையில் , மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது. என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை பெற்று வாழும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட கோட்டாபய

editors

பொது மக்களுக்கான தடுப்பூசியை பற்றிய ரணிலின் விளக்கம்…

user001

மன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல் – அரச தனியார் போக்குவரத்து சேவைகள் வழமை போல்[படங்கள் இணைப்பு]

editors