கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த அரிசி ஆலையில் அலுமினியம் பொருத்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் கீழே தவறி விழுந்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த 54 வயதான 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்தார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.