ஹப்புத்தளையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
எனினும், இந்த அனர்த்தத்தில் உயிரிழப்புகளோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹப்புத்தளை – வியாரகல பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கற்கள் உருண்டு வீழ்ந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
