November 6, 2026
இலங்கை

மின்னல் தாக்கம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (17) சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

மன்னாரில் சட்ட நடவடிக்கை

Lankasudar

நீதிமன்றத் தீர்ப்பே இறுதி

Lankasudar

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

ஞானசார தேரர் விவகாரம்

Lankasudar

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

Leave a Comment