November 6, 2026
இலங்கை

திரையரங்கில் ஆயுதங்கள் மீட்பு

கம்பஹா, கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் நேற்று (17) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு பிஸ்டல் ரகத் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு போர் 12 ரகத் துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

மேலும், போர் 12 ரகத்தைச் சேர்ந்த 398 தோட்டாக்கள், போர் 16 ரகத்தைச் சேர்ந்த 278 தோட்டாக்கள், பொயிண்ட் 32 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐஸ் வியாபாரம்: ஒருவர் கைது

Lankasudar

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்

Lankasudar

30,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு திட்டம்

Lankasudar

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

Lankasudar

சிகை நிலையங்களுக்கு கட்டுப்பாடு

Lankasudar

வெலிகமவில் போதைப்பொருள் மீட்பு

Lankasudar

Leave a Comment