November 6, 2026
இலங்கை

திடீர் மின்வெட்டு: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை

நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (17) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சார உற்பத்தி தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை ஒரு மாதத்திற்குள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் உரிய அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளத்தில் பீடி இலைகள் பறிமுதல்

Lankasudar

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு

Lankasudar

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

Lankasudar

நாமல் நீதிமன்றில்

Lankasudar

வவுனியாவில் போதை ஒழிப்பு

Lankasudar

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

Leave a Comment