November 6, 2026
இலங்கை

ஞானசார தேரர் விவகாரம்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்புக் கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டுக்காகக் குரல் கொடுத்த ஞானசார தேரர் அரசியல் நோக்கத்திற்காகவே பழிவாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என அமைச்சர் லால் காந்த தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதியே என்றும், லால் காந்தவிடம் யாரும் மன்னிப்புக் கோரவில்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் அமைச்சர் லால் காந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தற்போது பொலிஸ் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கடந்த காலங்களில் போராட்டங்களின் ஊடாகவே ஆட்சிக்கு வந்ததை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் பல்வேறு விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உதய கம்மன்பில எச்சரித்தார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை

Lankasudar

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Lankasudar

இடியுடன் மழை: கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை

Lankasudar

பசிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Lankasudar

மாடு கடத்தல் முயற்சி

Lankasudar

உத்தியோகத்தரைத் தாக்கியவர் கைது

Lankasudar

Leave a Comment