மொரட்டுவை – ராவதாவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் கொஹுவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, பெண் ஒருவர் குறித்த ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி கொஹுவல மக்கள் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
ஏ.டி.எம். இயந்திரத்தின் சி.சி.ரி.வி. காட்சிகளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், குறித்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுப்பதிகாரி, கொஹுவல: 071 859 1669
கொஹுவல பொலிஸ் நிலையம்: 011 285 3929

