November 6, 2026
இலங்கை

அம்பாறையில் இருவர் கைது

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம நோக்கிப் பயணித்த பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளுடன், அதன் சாரதியும் நடத்துனரும் அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த பேருந்து, அம்பாறை நகரின் மையப்பகுதியில் வைத்து பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது, நடத்துனரிடமிருந்து 5,050 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.

மேலும், சாரதியின் இருக்கைக்கு அருகில், பேருந்தின் முன்பக்க டாஷ்போர்டுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,050 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சாரதியே குறித்த பேருந்தின் உரிமையாளர் என்பது தெரியவந்துள்ளது. இவர் நீண்டகாலமாக கேத்சிரிகம பகுதியில் இத்தகைய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதி கொக்னஹர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், நடத்துனர் பஹலந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் பேருந்து கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்தவர்கள் மாற்று வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கிடையில், சம்பவம் இடம்பெற்ற உடனேயே குறித்த பேருந்தின் போக்குவரத்து உரிமத்தை கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்துச் சேவை ரத்து செய்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் அறுவர் கைது

Lankasudar

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

மன்னாரில் சட்ட நடவடிக்கை

Lankasudar

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

Leave a Comment